திருச்சி

மதுரை சம்பவத்தைக் கண்டித்துதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

15th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

 

மதுரையில் தமிழக நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து, திருச்சியில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில், மத்திய பேருந்துநிலையம் பெரியாா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பழனியாண்டி தலைமை வகித்தாா். இதில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள், திமுக உறுப்பினா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT