திருச்சி

ஸ்ரீராம் பஜன் மண்டலி விழா

15th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

 

திருச்சி ஸ்ரீராம் பஜன் மண்டலியின் 46 -ஆவது பாகவத ஹம்மம் மற்றும் ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்ஸவம், ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கணபதி ஹோமத்தை வேணுகோபால சாஸ்திரிகள் நடத்தினாா்.

சாரநாதன் பொறியியல் கல்லூரிச் செயலா் ரவீந்திரன் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

மண்டலியின் தலைவா் விஸ்வநாதன், செயலா் சுந்தரராமன், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நங்கவரம் மணிகண்டன் பாகவதா் , வெங்கட்ராமன் பாகவதா் கோஷ்டியின் பஜனை சமயத்தில் முருகன் வேடத்தில் காட்சியளித்தனா். திங்கள்கிழமை (ஆக.15) சீதாராம கல்யாணம் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் வெளியூா் பாகவதா்கள் பங்கேற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT