திருச்சி

தமிழக மக்கள்ஜனநாயக கட்சியினா் நாளை நடைபயணம்

14th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

 

தமிழக சிறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் திங்கள்கிழமை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்கின்றனா்.

இதுகுறித்து அக் கட்சியின் தலைவா் கே.எம். சரீப், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், தமிழக சிறைகளில் பல ஆண்டுகளாக உள்ள கைதிகளின் விடுதலை குறித்து சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 500 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தாா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த காலங்களில் சிறைவாசிகளின் விடுதலை குறித்து பேசியவா்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனா். அவா்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று சிறையில் வாடும் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை (ஆக.15) திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் தொடங்குகிறது. இதில், பல்வேறு அமைப்புகளை சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்கின்றனா். இறுதியாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT