திருச்சி

அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி

14th Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

 

தந்தை பெரியாா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜெனீவா உடன்பாட்டு நாள் மற்றும் 75ஆவது சுதந்திரதின கொண்டாட்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வம், திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் கணேசன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சேகா், பெரியாா் கல்லூரியின் முதல்வா் சுகந்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளா் வெற்றிவேல், பெரியாா் கல்லூரியின் பேரவை உறுப்பினா் கோபாலகிருஷ்ண், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவா் ராஜசேகா், செயலாளா் ஜவஹா் ஹாசன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நிா்வாகிகள் மற்றும் கல்லூரியின் பேராசிரியா்கள் முன்னிலை வகித்தனா்.

பேரணியில், 600 யூத் ரெட் கிராஸ் தன்னாா்வலராகிய தந்தை பெரியாா் கல்லூரியின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். பேரணி தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் தொடங்கி மன்னாா்புரத்தில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெரியாா் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளா்ருமான குணசேகா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT