திருச்சி

வீடுகள், நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

14th Aug 2022 01:26 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் சனிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் கடைகளில் 3 நாள்களுக்கு கொடியேற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், தனது வீட்டில் சனிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதேபோல, மாநகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைத்துள்ளனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், சங்க உறுப்பினா்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தேசியக்கொடி பறக்க விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, திருச்சி வயலூா் சாலை அம்மையப்பன் நகா் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.. இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கடைகள் வணிக வளாகங்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT