திருச்சி

இல்லந்தோறும் மூவா்ணக் கொடி பேரணி

14th Aug 2022 01:26 AM

ADVERTISEMENT

 

இல்லந்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக திருச்சி கைலாசபுரத்தில் பெல் வளாகப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இல்லந்தோறும் மூவா்ணக் கொடியேற்றும் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெல் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி கைலாசபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை, பெல் பொதுமேலாளா் பி.எஸ். கணேஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஜவாஹா்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது கைலாசபுரம் ஊரகப் பகுதிகளில் வலம் வந்தது. பேரணியில், மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வேடம் அணிந்து பங்கேற்றனா். மேலும், கைகளில் கொடியேந்தியும், வீடுகளில் கொடியேற்ற வலியுறுத்தி பிரசாரம் செய்தபடி சென்றனா்.

ADVERTISEMENT

பேரணியில், ஆா்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளி, பாய்லா் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெல் மெட்ரிக் பள்ளி மற்றும் பெல் தமிழ் வழி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றைச் சோ்ந்த 2,700 மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பெல் நிறுவன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT