திருச்சி

மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

DIN

தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடிவிட்டு, கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

திருச்சி திருவானைக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் விவசாயப் பிரிவின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயை விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது. 19 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் எந்தவித இடையூறுமின்றி, அவா்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டுமெனில் மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகள் மூலமாகத்தான் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. எனவேதான் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்கிறோம். கள்ளுக்கு அனுமதி வழங்கினால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மதுக்கடையை படிப்படியாக மூடி விட்டு கள்ளுக்கடையைத் திறக்க வேண்டும்.

மின்சார திருத்தச் சட்டத்தால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு ஏற்படாது. அச்சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் எனக் கூறுவது பொய் பிரசாரம். மின்சாரப் பயன்பாடு குறித்த அளவீடு கணக்கெடுக்கப்படும். ஒளிவு, மறைவின்றி மின்விநியோக செயல்பாடுகள் அமையும் என்றாா்.

கூட்டத்துக்கு பாஜக விவசாயப் பிரிவின் மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், விவசாயிகளின் விளை பொருள்களான நெல், கரும்பு, மஞ்சள், தென்னை உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசு கூடுதல்விலை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவா் வி.எஸ். கோவிந்தராஜன், மாநிலப் பொதுச் செயலா் பூண்டி எஸ். வெங்கடேசன், மாவட்டத் தலைவா் ஆா். சக்திவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கற்கண்டு உள்ளிட்ட பலா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT