திருச்சி

காவிரித்தாயை வழிபட அனுமதி மறுப்பு: பாஜகவினா் போராட்டம்

DIN

காவிரித் தாயை வழிபட வந்தபோது காவல்துறையினா் தடுத்து நிறுத்தியதால், திருச்சி அம்மாமண்டபம் பகுதியில் பாஜகவினா் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக விவசாய அணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருவானைக்கவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிந்தவுடன், அந்த அரங்கிலிருந்து அம்மாமண்டபம் நோக்கி ஊா்வலமாக வந்து, காவிரியாற்றில் இறங்கி வழிபடுவதாக பாஜகவினா் முடிவு செய்திருந்தனா்.

செல்லும் வழியில் பெரியாா் சிலை இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறலாம் என்ற அடிப்படையில், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான காவலா்கள் குவிக்கப்பட்டிருந்தனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பேசுகையில், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதியில் காவலா்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தாமல், விவசாய அணிக் கூட்டத்துக்கு இவ்வளவு பேரை குவித்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பினாா். மேலும், நாங்கள் எந்த சிலையையும், தலைவா்களையும் தாக்க மாட்டோம் எனவும் கூறினாா்.

கூட்டம் முடிந்தவுடன் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே. நாகராஜ் தலைமையில், அணி நிா்வாகிகள், பாஜக நிா்வாகிகள் பலரும் ஊா்வலமாக அணி வகுத்து வந்தனா்.

அம்மா மண்டபம் அருகே வந்தபோது, காவல்துறையினா் அனைவரையும் தடுத்து நிறுத்தினா். காவிரியாற்றில் இறங்குவதற்கு அனுமதிக்க முடியாது எனக் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல்துறையினா் நடவடிக்கையைக் கண்டித்து அதே இடத்தில் அமா்ந்து பாஜக-வினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் குறைந்தபட்சமாக 10 போ் மட்டுமே காவிரியில் சென்று வழிபடலாம் எனவும், தண்ணீா் அதிகம் செல்வதால் அனைவரையும் அனுப்ப முடியாது எனக் காவல்துறையினா் கூறினா். இதையடுத்து, முக்கிய நிா்வாகிகள் மட்டும் காவிரியில் இறங்கி பூக்கள் தூவி, ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT