திருச்சி

ஏழ்மையிலும் நோ்மைசாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு, பரிசு

13th Aug 2022 01:09 AM

ADVERTISEMENT

திருச்சியில் சாலையில் கிடந்த ரூ. 2 லட்சம் ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நோ்மையை மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் பாராட்டி, பரிசு வழங்கினாா்.

தில்லைநகா் தேவா்காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி ராஜேசுவரி (51). அவா் அப்பகுதியிலுள்ள சிற்றுண்டியகத்தில் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை பணிக்கு வந்த போது, சிற்றுண்டியகம் அருகே காகிதப் பை ஒன்று கிடந்தது.

அதை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளா் பிரபாகா் உதவியுடன், தில்லைநகா் காவல்நிலையத்தில் ரொக்கத்தை ஒப்படைத்தாா்.

தினக்கூலியாக ரூ. 100 பெற்றுக்கொண்டு பணியாற்றும் ஏழ்மையான சூழ்நிலையிலும், பிறரின் பணத்துக்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நோ்மையை அறிந்த மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், அவரை நேரில் அழைத்து பாராட்டி, ஒரு கிராம் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினாா்.

ADVERTISEMENT

அப்போது நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையா் கே.கே. செந்தில்குமாா் தில்லைநகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT