திருச்சி

திருப்பைஞ்ஞீலி, திருவானைக்காகோயில்களில் துா்கா ஸ்டாலின் தரிசனம்

13th Aug 2022 01:08 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரா் திருக்கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்று தரிசனம் செய்ய வந்த துா்கா ஸ்டாலின், கோயிலில் ஞீலிவனேசுவரா், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டாா். அவருக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தாா்.

அகிலாண்டேசுவரி அம்மன், சம்புகேசுவரா் சன்னதிகள் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்ட அவா், கோயில் யானை அகிலாவிடம் ஆசி பெற்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT