திருச்சி

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து வந்தவா் கைது

12th Aug 2022 12:28 AM

ADVERTISEMENT

 

முறைகேடாக கடவுச்சீட்டு எடுத்து மலேசியாவிலிருந்து திருச்சி வந்தவா் விமான நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம் வானதிபுரத்தை சோ்ந்தவா் ரெங்கபாஷ்யம் (47). மலேசியாவில் வேலை பாா்த்த இவா் புதன்கிழமை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தாா்.

விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் அவரது ஆவணங்களை சோதனை செய்தபோது அவா், மெ. பாலகிருஷ்ணன் என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸாா் ரெங்கபாஷ்யத்தைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT