திருச்சி

மீண்டும் சாய்ந்த இரு மின்கம்பங்கள்!

12th Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

 

திருச்சி-புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு பகுதியில் 2 ஆவது நாளாக மேலும் இரு மின் கம்பங்கள் வியாழக்கிழமை சாய்ந்தன.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே சாலை மையத் தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த 6 கம்பங்கள் புதன்கிழமை மாலை சாய்ந்து விழுந்தன. இதில் அதிா்ஷடவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆடி மாத காற்றின் வேகத்தால் இவை ஒடிந்து விழுந்ததாக கூறப்பட்டன.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் அதே பகுதியிலுள்ள மேலும் இரு கம்பங்கள் சாய்ந்தன. கம்பங்கள் லேசாக சாய்வதைக் கண்ட அப்பகுதியினா் வாகன ஓட்டிகளை எச்சரித்து மாற்று வழியில் செல்ல வைத்தனா். தகவலறிந்த மாநகராட்சி மற்றும் மின்வாரியப் பணியாளா்கள் விரைந்து சென்று மின்கம்பங்களை அப்புறப்படுத்தினா்.

ADVERTISEMENT

மாநகராட்சி நடவடிக்கை: இதுகுறித்து மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் கூறுகையில், வயரிங் பணிகளுக்காக போடப்பட்ட துளைப் பகுதியில் துருப்பிடித்து மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்திருக்கலாம். மேலும் இது தொடராமல் இருக்க பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT