திருச்சி

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

12th Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

 

பொதுமக்களின் எதிா்ப்பால் துறையூா் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் தடை செய்தது.

துறையூா் இந்திரா நகா் விரிவாக்கப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாா் கைப்பேசி நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொண்டதற்கு அங்குள்ள மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் புகாா் செய்தனா். இதையடுத்து நகராட்சி நிா்வாகம் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டது. ஆயினும் தனியாா் நிறுவனம் வியாழக்கிழமை கோபுரம் அமைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்ட தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் பணியை தடை செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT