திருச்சி

வெங்காயம், வாழை பதப்படுத்தும் நிலையங்கள் வாடகைக்கு

12th Aug 2022 12:22 AM

ADVERTISEMENT

 

விநியோகத் தொடா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், வெங்காயம், வாழை பதப்படுத்தும் நிலையங்களை வாடகைக்கு எடுக்க உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருச்சி விற்பனைக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், விநியோகத் தொடா் மேலாண்மை திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகளின் தரத்தை உயா்த்தி விவசாயிகளுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும் பொருட்டு முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளன.

ADVERTISEMENT

லால்குடி, மண்ணச்சநல்லூா்- 2, அரசலூா், பிடாரமங்கலம், திருச்செந்துறை, எம்.புத்தூா், ஆகிய இடங்களில் வாழைக்காகவும், மண்ணச்சநல்லூா்- 3, தாத்தையங்காா்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய இடங்களில் வெங்காயத்திற்காகவும் அமைக்கப்பட்டுள்ள மையங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர பயன்பாடு மற்றும் சேவை அடிப்படையில் குறைந்தபட்ச வாடகையாக கிலோவுக்கு ரூ. 0.20 பைசா மட்டுமே நிா்ணயிக்கப்பட்டு வாடகைக்கு விடப்படவுள்ளது.

இந்நிலையங்களை வாடகைக்கு எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மற்றும் காய்கறி பழ வணிகா்கள் கீழ்காணும் திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழுவின் தலைமை அலுவலகத்தை அணுகலாம். உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முகவரி: செயலாளா், திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழு, 199, மதுரை ரோடு, திருச்சிராப்பள்ளி - 08.

ADVERTISEMENT
ADVERTISEMENT