திருச்சி

முதியோா் ஆலோசனைக் குழு உறுப்பினா்களாக அழைப்பு

12th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

மூத்த குடிமக்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக் குழுவில் புதிய உறுப்பினா்களாக ஆக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் மூத்த குடிமக்கள் பெற்றோா் பராமரிப்புச் சட்டத்தின்படி நலவிதிகள் வகுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் அரசாணையும் வெளியிட்டு மாநில அளவிலான முதியோருக்கு ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது. இக் குழுவில் உள்ள 7 அலுவல்சாரா உறுப்பினா்களின் 3 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடா்ந்து புதிய உறுப்பினா்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா்கள் முதியோா் நல மேம்பாட்டுப் பணிகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டு அனுபவம் மற்றும் முழு ஈடுபாடும் கொண்டிருக்க வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டவராக வேண்டும். உரிய விவரங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT