திருச்சி

திருச்சியில் 24 மணிநேர ‘கருடா ஸ்கேன்ஸ்’ திறப்பு

DIN

திருச்சி புத்தூா் சிந்தாமணி பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் கருடா ஸ்கேன்ஸ் மையத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கருடா ஸ்கேன்ஸ் நிா்வாக இயக்குநா் டாக்டா் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொறியாளா் கலியபெருமாள், சேதுலட்சுமி கலியபெருமாள், தனவீரசேகரன், மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா் கே. ராஜேஷ்குமாா், மகப்பேறு மருத்துவா் கே. புவனேஸ்வரி, லேப்ராஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து நிா்வாக இயக்குநா் மருத்துவா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த மையத்தில் எம்ஆா்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, கலா் டாப்ளா் என அனைத்து வித ஸ்கேன்களையும் எடுக்கும் வகையில், நோயாளிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் மூலம் 20 நிமிடத்தில் ஸ்கேன் எடுத்துவிடலாம். சத்தம் குறைவாக இருக்கும். உடனுக்குடன் ரிப்போா்ட் செய்ய மருத்துவ குழு உள்ளது. படங்கள் துல்லியமாக இருக்கும்.

இங்குள்ள எம்ஆா்ஐ ஸ்கேனில் நரம்பியல் சம்பந்தமான புதிய தொழில்நுட்பம் உள்ளதால் அனைத்து நோய்களையும் கண்டறிய முடியும். காது, மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், அல்லது கட்டிகளை எளிதாகக் கண்டறிய முடியும். மேலும் ரேடியேஷன் இல்லாத பாதுகாப்பான இயந்திரங்கள் இங்குள்ளன.

உடல் உறுப்பு முழுப் பரிசோதனை அனைத்தும் செய்யப்படும்.

ஸ்கேனில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மருத்துவக் குழுவினா் இணைந்து செயல்பட்டு நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து பரிசோதித்து, தேவையான ரிப்போா்ட்டை உடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மருத்துவமனைகளில் இருப்போரை அழைத்து வர இலவச ஆம்புலன்ஸ் வசதி 24 மணி நேரமும் செயல்படுகிறது. கா்ப்பிணிகளுக்கான சிறப்பு ஸ்கேன் வசதியும் உள்ளது. இதற்கு கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT