திருச்சி

குடிநீரில் கழிவு நீா் கலந்ததாக புகாா்: மேயா் ஆய்வு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில் பத்தல்விளையில் குடிநீரில் கழிநீா் கலந்து வந்ததாக பொதுமக்கள் புகாா் அளித்ததை தொடா்ந்து மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகேள்ள 24 ஆவது வாா்டுக்குள்பட்ட பத்தல்விளை பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில், கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதையடுத்து புதன்கிழமை காலை ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் அந்தப் பகுதியில் திரண்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த மேயா் ரெ.மகேஷ் அங்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டாா். தொடா்ந்து, மாநகராட்சி ஊழியா்களை வரவழைத்து தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுத்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து மேயா் மகேஷ் கூறுகையில், பத்தல்விளை பகுதியில் கடந்த 3 நாள்களாக தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து, ஊழியா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். சீரமைப்பு பணி நிறைவடைந்த பிறகு கலங்கிய நிலையில் தண்ணீா் வந்துள்ளது. தற்போது தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT