திருச்சி

காவிரி நீா் வரத்து, பயிா்கள் பாதிப்பு: ஆட்சியா் ஆய்வு

DIN

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் காவிரியில் நீா்வரத்து மற்றும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெளியேற்றப்படும் நீா், பயிா் பாதிப்பு, கொள்ளிடம் ஆற்றில் உடைந்த பழைய பாலப்பகுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அபாயமான பகுதிகளில் வசிப்போா் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் முக்கொம்பு அணையில் அவ்வப்போது ஆய்வு செய்கிறாா். அதன்படி செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது நீா் வரத்து மற்றும் வெளியேற்ற விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து திருவானைக்கா - நம்பா் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றில் இருந்த பழைய பாலத்தின் 17 ஆவது தூண் இடிந்ததை ஆய்வு செய்தாா். ஆற்றில் நீா் வழிந்தவுடன் இந்தப் பாலம் முழுவதையும் இடித்து அகற்றிட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

சேதமடைந்த பயிா்கள்: கல்லணை சாலையிலுள்ள காவிரியாற்றில் செல்லும் நீா் கரையில் வழிந்து தரைப்பாலம் வழியாக திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி மற்றும் கிளிக்கோடு ஆகிய கிராமங்களின் வழியே கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்ால் பாதிக்கப்பட்ட வாழைகள் குறித்தும், லால்குடி வட்டம் அரியூா், செங்கரையூா், டி.கள்ளிக்குடி மற்றும் அன்பில் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து கூழையாற்றில் நீா் மிகுந்து வயல்களில் புகுந்ததால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்து, சேத விவரம் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

கொடி தயாரிக்கும் பணிகள் ஆய்வு: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மண்ணச்சநல்லூரில் மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரிக்கும் தேசியக்கொடிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், பணியை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

முன்னதாக திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை(11ஆம் தேதி) போதைப் பொருள்களுக்கு எதிராக 10,000 மாணவ, மாணவியா் பங்கேற்று உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, நடந்துவரும் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வுகளின் போது நீா்வளத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT