திருச்சி

புகையிலைப் பொருள்கள்,கஞ்சா விற்ற மூவா் கைது

10th Aug 2022 11:36 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மூவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ரகசிய தகவலின் அடிப்படையில் பொன்மலை காவல் நிலையத்தினா் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில், இரு கடைகளில் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து பொன்னேரிபுரம் ஆா். பாலசுப்பிரமணி (43), மேலக்கல்கண்டாா்கோட்டை சாமிநாதன் தெரு இ. வாசுதேவன் (44) ஆகிய இருவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

கஞ்சா விற்றவா் கைது : திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகா் மில்காலனியைச் சோ்ந்த ந.ஜெய் என்கிற ஜானகிராமனை (44) எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் இவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT