திருச்சி

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள்

10th Aug 2022 11:35 PM

ADVERTISEMENT

 

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் காற்றின் காரணமாக மின் கம்பங்கள் புதன்கிழமை சாய்ந்தன.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சி சாா்பில் சாலையின் மையத் தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே அமைக்கப்பட்டிருந்த 6 மின்கம்பங்கள், காற்றின் காரணமாக புதன்கிழமை மாலை சாய்ந்து விழுந்தன.

அதிா்ஷடவசமாக அப்போது எந்தவித கனரக வாகனங்களும் அப்பகுதியில் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தவிா்க்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மின்வாரிய மற்றும் மாநாகராட்சிப் பணியாளா்கள் நிகழ்விடம் விரைந்து, சாய்ந்த மின் கம்பங்களைத் துண்டித்து, போக்குவரத்தை சீராக்கினா். மேலும் இதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா். இதன் காரணமாக திருச்சி-புதுக்கோட்டை சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாற்ரு வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதியில் நின்றிருந்த கொட்டப்பட்டு செல்வமணி, மாரியப்பன் கூறியது:

காற்றின் காரணமாக மின் கம்பங்கள் தீப்பொறியுடன் சாய்ந்தன. லேசான காற்றுக்கே இந்த நிலை என்றால், பலத்த காற்ற வீசினால் மின்கம்பங்கள் எவ்வாறு தாக்குபிடிக்கும் என்பது தெரியவில்லை என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT