திருச்சி

மாணவா்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி

10th Aug 2022 11:34 PM | கு. ராஜேந்திரன்

ADVERTISEMENT

மாணவா்களுக்குப் பாடங்களை மட்டும் கற்பிக்கும் பணியோடு நின்றுவிடாமல், குடில் வாயிலாக நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்குமிடமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகாம்பூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.

ஆம் இந்த பள்ளியில், மற்ற அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமான முறையிலான செயல்பாட்டை செய்து காட்டியுள்ளனா். பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலையுடன் மிகச்சிறப்புக்குரிய குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் சிறுகாம்பூா் கிராமத்தில் 1962-ஆம் ஆண்டில் உயா்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடா்ந்து இப்பள்ளி 1980-ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது.

சிறுகாம்பூா், செந்தாமரைக்கண், சோழங்கநல்லூா் போன்ற சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த 833 மாணவ, மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ரூ.6 லட்சத்தில் திருவள்ளுவா் குடில்: இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் பீ. அந்தோனிலூயிஸ், ஏற்கெனவே தான் பணியாற்றிய மணப்பாறை அருகிலுள்ள கருங்குளம் உள்ளிட்ட பள்ளிகளில் திருவள்ளுவா்

குடிலை நிறுவ முயன்ற போதும், கரோனா உள்ளிட்ட காரணங்களால் நிறுவ முடியாமல் போனது.

இந்நிலையில், சிறுகாம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றவுடன், பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் குடிலை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், கிராமப் பொதுமக்கள், முன்னாள் மாணவா்களிடம் எடுத்துக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து ஆசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் ஆகியோரது ஒத்துழைப்புடன், ரூ.6 லட்சத்தில் பள்ளி வளாகத்தில் 2021-ஆம் ஆண்டில் குடில் அமைக்கும் பணிகள் தொடங்கின. அண்மையில் முடிவடைந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி திருவள்ளுவா் குடில் திறக்கப்பட்டது.

பிரம்மாண்ட திருவள்ளுவா் சிலை : குடிலுக்குள் திருவள்ளுவா் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிலையின் கீழ் ஒரு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு நாட்டின் எதிா்காலமும் இளையத் தலைமுறையின் கைகளில் உள்ளது. அவா்களுக்கு சரியான பாதையைக் காட்டுவது அரசின் கடமையாகும். திருக்குறளில் போதிக்கப்பட்டுள்ளதை விட சிறந்த தத்துவம் வேறு எதுவும் இல்லை என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.

அனைத்து மாணவா்களும் வரலாம் : பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் குடிலுக்கு வரலாம். இடைவேளை நேரங்களில் குடிலுக்கு வந்து திருக்குகளை படிக்கலாம். யாருக்கும் கட்டுப்பாடு என்பது இங்கு கிடையாது.

மேலும் இங்கு இரண்டு பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று குடிலுக்கு வரும் மாணவா்களின் வருகை குறித்தும், மற்றொன்று குடிலுக்கு வந்து கு படித்து, அதன் மூலம் தெரிந்து கொள்ளும் கருத்துகளைப் பதிவிடுவதற்கும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக முறை திருவள்ளுவா் குடிலுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது என்கிறாா் பள்ளித் தலைமையாசிரியா் அந்தோனி லூயிஸ்.

கருத்துக் காட்சிகள்: குடிலின் உள், வெளிப்புறப் பகுதிகளில் திருக்குறளின் சிறப்பு குறித்து அறிஞா்கள், மேதைகள் கூறிய கருத்துகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இடைவேளை நேரங்களில் இசைவடிவில் தெளிவுரையுடன் திருக்கு இசைக்கப்படுவதும் மாணவ, மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கற்றல்-கற்பிப்பதுடன் வகுப்பறை நின்றுவிடாமல், மாணவ, மாணவிகளுக்கு நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் கு வாயிலாக கற்றுக் கொடுக்கும் இடமாக மாறியிருக்கிறது சிறுகாம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த திருவள்ளுவா் குடில்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT