திருச்சி

75-ஆவது சுதந்திர தின விழா மாநகராட்சியில் சலுகைக் கட்டணத்தில் தேசியக் கொடி விநியோகம்

10th Aug 2022 11:36 PM

ADVERTISEMENT

 

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, திருச்சி மாநகராட்சி சாா்பில் சலுகைக் கட்டணத்தில் தேசியக் கொடி விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியேற்றி, சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து வீடுகள் தோறும் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றும் வகையில், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் கொடி தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

சலுகைக் கட்டணத்தில் : இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சாா்பில் சலுகைக் கட்டணத்தில் தேசியக் கொடி விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 2.75 லட்சம் வீடுகள் உள்ளன. சுமாா் 2 லட்சம் தேசியக் கொடிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அவை பெறப்பட்டு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கு ஒன்றரை அளவுள்ள தேசியக்கொடி ரூ. 21 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாநகராட்சியின் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் தொகையை செலுத்தி, ரசீதுடன் தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம். மேலும் மாநகராட்சி உறுப்பினா்கள் மூலமும் கொடிகளை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT