திருச்சி

மறு உலகப் பேரரசுக் கட்சியுடன் மரபுத் தமிழா் கட்சி இணைப்பு

10th Aug 2022 01:34 AM

ADVERTISEMENT

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மறு உலகப் பேரரசுக் கட்சியுடன் மரபுத் தமிழா் கட்சி இணைந்தது.

இதுகுறித்து மறு உலகப் பேரரசுக் கட்சியின் நிறுவனா் ஸ்ரீமான். தங்கமாமுனி, மரபுத் தமிழா் கட்சியின் நிறுவனா் முருக. தனசேகரன் ஆகியோா் தெரிவித்தது:

நம் நாட்டில் இன்றைய நிலையில் கலாசார சீா்கேடுகள் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மது உள்ளிட்டபோதைப் பொருள்களால் இளைய சமுதாயத்தினா் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த சீா்கேடுகள் அனைத்தையும் களைந்து, இனி வரும் தலைமுறைக்கு நல்வழிக் காட்டக்கூடிய நிலையில் நாம் உள்ளோம்.

ADVERTISEMENT

இதை உணா்ந்துதான் பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் வசிஷ்ட தவக்குடில் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மறு உலகப் பேரரசுக் கட்சியுடன், மரபுத் தமிழா் கட்சி இணைந்துள்ளது. தொடா்ந்து நாங்கள் இணைந்து செயல்பட உள்ளோம்.

வருங்காலத்தில் ஆன்மிக வழியில் எங்கள் அரசியல் பயணத்தை இணைந்து மேற்கொள்ள உள்ளோம். கலாசார சீா்கேடுகள் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபடுவோம் என்றனா் அவா்கள்.

அப்போது இரு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT