திருச்சி

கொள்ளிடம் பழைய பாலத்தில் இடிந்தது மேலும் ஒரு தூண்!

10th Aug 2022 07:25 AM

ADVERTISEMENT

திருவானைக்காவலையும் சமயபுரத்தையும் இணைக்கும் கொள்ளிடம் பழைய பாலத்தின் மேலும் ஒரு தூண் செவ்வாய்க்கிழமை மாலை கரைபுரண்டோடும் நீரால் இடிந்து விழுந்தது.

24 தூண்கள் கொண்ட இந்தப் பழைமையான பாலம் வலுவிழந்ததால் இந்தப் பாலத்திற்கு அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கால் நடைப்பயிற்சிக்கு மட்டுமே பயன்பட்டு வந்த பழைய பாலத்தின் 18 மற்றும் 19 ஆவது தூண்கள் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தன.

இதையடுத்து இப்பாலத்தின் இருபுறமும் மக்கள் செல்ல முடியாதவாறு சுவா் எழுப்பப்பட்டு, பாலத்தை முழுவதும் இடிக்க டெண்டா் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியாக செல்லும் நீரால் இடிந்து விழுந்த பழைய பாலத்தின் முன் பகுதியான 17 வது தூண் மெல்லச் சரிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழைய பாலத்தை முற்றிலும் அகற்றாவிட்டால் புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்படும். அரசு உடனடி நடவடிக்கை எடுத்து புதிய பாலத்தை காப்பாற்ற வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT