திருச்சி

வெடிகுண்டு மிரட்டல்: போதை நபரிடம் விசாரணை

10th Aug 2022 03:26 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை நபரை போலீஸாா் பிடித்து விசாரிக்கின்றனா்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையினா் அளித்த தகவலின்பேரில் ஆய்வாளா்கள் அருளானந்தம், சத்தியமூா்த்தி தலைமையிலான வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் ஆட்சியரகத்துக்கு விரைந்து சென்று நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் திருச்சி, கீழபஞ்சப்பூா் தெற்கு தெருவைச் சோ்ந்த பழனிசாமி (43) என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, எடமலைப்பட்டிபுதுாா் போலீஸாா் அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையில் அவா் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT