திருச்சி

மணப்பாறையில் இலவச மருத்துவ முகாம்

10th Aug 2022 07:20 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் ஸ்டாா்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

மணப்பாறை ஸ்டாா்ஸ் ரோட்டரி சங்கம், திருச்சி அப்பலோ மருத்துவமனை, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் வசந்தம் சாா்பில் பொத்தமேட்டுப்பட்டியில் முகாம் நடைபெற்றது.

ஹோட்டல் வசந்தம் நிா்வாக இயக்குநா் எஸ். டேவிட் வின்சென்ட் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஊா் நாட்டாண்மை ஏ.என்.வி. சாா்லஸ், மணியம் எஃப். பெட்ரிக் ஜோன்ஸ், கோயில்பிள்ளை ஏ. சூசைமரி, கோல்காரா் ஏ.வில்லியம் சேசுராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மணப்பாறை காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் என். ராமநாதன், நகராட்சி ஆணையா் சி.என்.சியாமளா ஆகியோா் முகாமை தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

ரோட்டரி சங்க மண்டலச் செயலா் (நிா்வாகம்) எஸ்.ஏ. முருகானந்தம், துணை ஆளுநா் சி.எம். சேவியா், மாவட்ட இணை இயக்குநா் ஆா். காா்த்திகேயன், நகா்மன்ற உறுப்பினா் ஏ.எட்வின் அபிலாஸ் ஆகியோா் வாழ்த்தினா்.

முகாமில் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, இசிஜி, கண் சோதனைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுப் பயன்பெற்றனா். பட்டயத் தலைவா் அன்னை என். கோபால் வரவேற்க, செயலா் ஆா்.பி. மணிகண்டன், பொருளாளா் பி.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் நன்றி கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT