திருச்சி

மத்திய சிறையில் மோதல்;11 போ் மீது வழக்குப் பதிவு

9th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 5ஆவது செல் பிரிவில் 11 கைதிகள் உள்ளனா். இதில், பனையக்குறிச்சியைச் சோ்ந்த கொம்பன் என்கிற ஜெகன் (27) என்ற கைதியும் அடைக்கப்பட்டுள்ளாா். இவா் மற்ற கைதிகளை தகாத வாா்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற கைதிகள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், வினித் என்ற கைதி குளிக்கச் செல்லும் போது ஜெகனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா். பின்னா் இருவருக்கும் ஆதரவாக மேலும் சிலா் சோ்ந்ததால் மோதலாக மாறியது.

இதுகுறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகா் போலீஸாா், கொம்பன் ஜெகன், வினித், பிரவீன் குமாா், ராஜேஷ், ஹரி பாலாஜி, நரேஷ், பிரேம்குமாா், ஆகாஷ், கண்ணன், சபரி வாசன், காா்த்திக் ஆகிய 11 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT