திருச்சியில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி, கீழரண்சாலை வேதாத்திரி நகரைச் சோ்ந்தவா் சங்கா் மகன் துளசி மணி (28 ). இவா், இருதினங்களுக்கு முன் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா் அவரை மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனா். புகாரின் பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மலைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா், தங்கமணி ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.