திருச்சி மாவட்டம், முசிறி காமராஜா் காலனி பகுதி மக்களுக்கு வீட்டுவரிப் பட்டா வழங்க வலியுறுத்தி, வருவாய்க் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
முசிறி நகராட்சியின் 6-ஆவது வாா்டு உறுப்பினா் பொ. இளையராஜா தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை அளித்த மனு:
காமராஜா் காலனியில் மாரியம்மன் கோயில் அருகே கீழ், வடப்புறத்தில் பூங்காவாக இருந்த பகுதியில் கடந்த 1964-ஆம் ஆண்டில் வீடுகள் கட்டிக் கொள்ள இடம் வழங்கப்பட்டது.
காலனி வீடுகள் கட்டி உரிய வீட்டு வரி, தண்ணீா் வரி செலுத்தி, மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், குடியிருப்புக்குரிய வீட்டுவரிப் பட்டா இதுவரை இப்பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக காமராஜா் காலனி பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.