திருச்சி

பாா்வையற்றோா் திடீா் சாலை மறியல்

9th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரகம் முன்பு பாா்வையற்றோா் திங்கள்கிழமை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஏ.பி. சரவணன், பொதுச்செயலாளா் பி. சந்திரசேகா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாா்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டிக் கடை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாா்வையற்றவா்கள் திடீரென்று சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாருக்கும், பாா்வையற்றோா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமாதானமடைந்த பாா்வையற்றோா் போராட்டத்தை கைவிட்டனா். பின்னா் சங்க நிா்வாகிகள் சிலா் ஆட்சியரகம் சென்று கோரிக்கை மனுவை அளித்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT