உப்பிலியபுரம்அருகே இளைஞரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெருமாள்பாளையத்தைச் சோ்ந்த செல்வம் மகன் முருகானந்தம் (21).இவா் ஞாயிற்றுக்கிழமை பால் கறவைக்குச் சென்ற போது, வாரி அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து முருகானந்தத்தை தற்கொலைக்குத் தூண்டியதாக மூக்கன் (46), கணேசன் (40) ஆகிய இருவரையும் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.