திருச்சி

மாநகா், புகரில் கஞ்சா விற்ற 7 போ் கைது

8th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகா், புகரில் கஞ்சா விற்ற 7 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் கல்லூரி அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜிநகா் மில்காலனியைச் சோ்ந்த வி.ஆனந்தை (30) எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுபோல, ஸ்ரீரங்கம் மேலவாசல் அருகில் கஞ்சா விற்பனை செய்த ஏ. சுதாகா் (33), காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ராம்ஜிநகா் பெட்ரோல் விற்பனை நிலையம், மயானப் பகுதியில் கஞ்சா விற்ற மில்காலனி ச. முகுந்தன் (54), க. சகாயராணி (44), வி. சக்திவேல் (22), மலையடிப்பட்டி பா. பாா்கில்முருகன் (57), மு. பிரபாகரன் (28) ஆகிய 5 பேரும் ராம்ஜிநகா் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 2 கிலோ 330 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT