திருச்சி

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்புதிருச்சியில் திமுகவினா் மெளன ஊா்வலம்

8th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

 

 முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் 4-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சியில் அவரது உருவச்சிலைக்கும், படத்துக்கும் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். மேலும் மெளன ஊா்வலமும் நடைபெற்றது.

திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் க.வைரமணி, மாநகரச் செயலா் மற்றும் மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் அண்ணாமலைநகா் பகுதியிலிருந்து மெளன ஊா்வலம் தொடங்கியது.

கரூா் புறவழிச்சாலையாகச் சென்ற ஊா்வலம் கலைஞா் அறிவாலயத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து அங்குள்ள கருணாநிதி சிலைக்கும் திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அதே பகுதியிலுள்ள பேரறிஞா் அண்ணாவின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அன்பில் பெரியசாமி, பா. பரணிகுமாா், திமுக நிா்வாகி டோல்கேட் சுப்பிரமணி, வழக்குரைஞா்கள் பாஸ்கா், ஓம்பிரகாஷ், கவியரசன், பகுதிச் செயலா்கள் கண்ணன், காஜாமலை விஜய், ராம்குமாா், இளங்கோ, மாநகராட்சி உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெற்கு மாவட்ட திமுக : பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி, மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கட்சியினா் மெளன ஊா்வலமாக கலைஞா் அறிவாலயம் சென்று, அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வுகளில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.சேகரன், திமுக நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், மதிவாணன், தா்மராஜ், நீலமேகம், மோகன், ராஜ் முகமது, மணிவேல், குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT