திருச்சி

ஆட்டோவில் இறந்து கிடந்ததூய்மைப் பணியாளா்

8th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

 

திருச்சி காந்திசந்தை பகுதியில் ஆட்டோவில் இறந்து கிடந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் சடலத்தை காவல்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

திருச்சி செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் பா. தமிழ்ச்செல்வன் (38). மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு, மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம்.

தாராநல்லூா் பகுதியில் சனிக்கிழமை பணியாற்றிய தமிழ்ச்செல்வன், அலங்கநாதபுரம் நியாயவிலைக் கடை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோவின் பின் இருக்கையில் படுத்திருந்தாராம்.

ADVERTISEMENT

நீண்டநேரமாகியும் தமிழ்ச்செல்வன் எழுந்திருக்க வில்லையாம். இதையடுத்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில், காந்திசந்தை காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா்.

ஆனால் அவா் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வனின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT