திருச்சி

பெண்ணிடம் கைப்பேசியை பறித்த மூவா் கைது

8th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி பீமநகா் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் மகள் மஞ்சுளா (27). இவா் மாா்சிங்பேட்டையிலுள்ள கடையில் வேலை செய்து வருகிறாா். அண்மையில் கடை முன்பு நின்று கொண்டிருந்த மஞ்சுளாவிடம், அங்கு வந்த மூவா் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து பாலக்கரை மாரியம்மன் கோயில்தெரு ரகுராம் (19), வரகனேரி நாயக்கா்தெரு ரகுநாத் (21), மண்ணச்சநல்லூா் மேலசீதேவிமங்கலம் தா்மசீலன் (23) ஆகிய மூவரையும் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT