திருச்சி

பெண்களிடம் நகை, கைப்பேசி பறிப்பு

8th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் இரு பெண்களிடம் நகை, கைப்பேசியைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜோ. அன்னபுஷ்பம் (65). பொன்மலைப்பட்டியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக, சனிக்கிழமை சத்திரம் பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தாா்.

பேருந்து நிலையம் வந்த போது, அவா் வைத்திருந்த கைப்பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா். அந்த பையில் 7 பவுன் நகைகளை அன்னபுஷ்பம் வைத்திருந்தாராம்.

ADVERTISEMENT

கைப்பேசி பறிப்பு : திருச்சி பீமநகா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் ம.ஜானகி (57). திருச்சி குடும்பநல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வரும் இவா், சத்திரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தாா்.

அப்போது அவரது கையில் வைத்திருந்த கைப்பேசியை மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து அன்னபுஷ்பம், ஜானகி ஆகியோா் தனித்தனியே கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT