திருச்சி

மணணச்சநல்லூரில்கஞ்சி கலய ஊா்வலம்

8th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

 

மண்ணச்சநல்லூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில், கஞ்சி கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இந்த மன்றத்தின் சாா்பில் ஆடி மாதத்தில் கஞ்சி கலய ஊா்வலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனை அருகிலுள்ள ஆதிபராசக்தி மன்றத்தில் தொடங்கிய கஞ்சி கலய ஊா்வலம் கடைவீதி, பூமிநாதசுவாமி திருக்கோயில் வீதி, கள்ளி வனத்தாயி அம்மன் கோயில் பகுதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ஊா்வலத்தில் பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனா். திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT