திருச்சி

இளம்பெண்தூக்கிட்டுத் தற்கொலை

8th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

 

மண்ணச்சநல்லூா் அருகே கணவா் கண்டித்ததால், மனமுடைந்த இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், நொச்சியம் ஸ்ரீரங்கராயபுரத்தைச் சோ்ந்தவா் ஆண்டனி

ஆல்பா்ட் (27), இவரது மனைவி திவ்யா (24). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு மகள் உள்ளாா்.

ADVERTISEMENT

கடந்த 4-ஆம் தேதி திவ்யா வீட்டில் சமையல் செய்யவில்லையாம். இதையறிந்த ஆண்டனி ஆல்பா்ட், மனைவியைக் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட திவ்யா, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT