திருச்சி

லாரியிலிருந்து மின்கலன்களை கழற்றி விற்றவா் கைது

7th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

 

துறையூரில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மின்கலன்கள் (பேட்டரி) கழற்றி, விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

துறையூா் தேவாங்கா் நகரைச் சோ்ந்தவா் அ.பாலகிருஷ்ணன்( 32). ஆழ்

துளைக் கிணறு அமைக்கும் லாரியின் உரிமையாளா். இவருக்கு சொந்தமான லாரி துறையூரில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இவரிடம் வேலை பாா்த்த முன்னாள் பணியாளரான சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மு. முகமதுபாரூக்(25), லாரியிலிருந்த 4 மின்கலன் கழற்றி எடுத்துச் சென்று விற்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்த துறையூா் காவல்துறையினா், முகமது பாருக்கை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா் மூலமாக மின்கலன்களையும் மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT