திருச்சி

மாநிலக் கபடி போட்டி திருச்சி மாவட்ட வீரா்களைதோ்வு செய்ய ஆக.9-இல் முகாம்

7th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

 

மாநிலக் கபடி போட்டிக்கான மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம், திருச்சியில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் தலைவா் டி. நீலகண்டன் கூறியது:

20 வயதுகுள்பட்ட ஆண்கள் பிரிவினருக்கான மாநில

ADVERTISEMENT

அளவிலான 48-ஆவது ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட்19 முதல் தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகம் நடத்தவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம், அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கும் வீரா்கள் 20.11.2002 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். வீரா்கள் 70 கிலோ எடை உள்ளவராக இருக்க வேண்டும். வரும்போது

ஆதாா் அட்டை நகலை அவசியம் கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தை 9524676767 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். காலை 10 மணிக்குள் வராத வீரா்கள் தோ்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT