திருச்சி

கலைத்துறையில் சிறந்த 15 பேருக்கு விருது

7th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

 

கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு ஆண்டுதோறும் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கி, கெளரவப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞா்களை மாவட்டந் தோறும் தோ்வு செய்து, அவா்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டத்தில் பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம், குரலிசை, நாடகம், கிராமியப் பாடல், நாகசுரம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் 5 வகையாக விருதுகளின் கீழ் கெளரவிக்கப்படவுள்ளனா்.

விருதின் பெயா் , தோ்வு பெற்றோா் என்ற அடிப்படையில் விவரம் :

கலை இளமணி : மு.இதிகாசினி (பரதநாட்டியம்), எ.ரஞ்சனாதேவி (ஓவியம்), மோ.பி.சுகித்தா (சிலம்பம்).

கலை வளா்மணி : மு.ஜெயவா்தினி (ஓவியம்), ஷபின் பிரைட் (பரத நாட்டியம்), ரோ.ஆனந்தராஜ் (கரகாட்டம்).

கலைச்சுடா்மணி : அ.லீமாரோஸ் (குரலிசை), மீ.விஜயராகவன் (நாகசுரம்)

அ.ஈஸ்வரி (நாடகம்).

கலை நன்மணி : எ.ஸ்ரீதா் (நாடகம்), ரா.உஷாராணி (நாடகம்), வைரமுத்துசாமி (கிராமியப் பாடல்),

கலை முதுமணி: செ.தங்கராசு (நாடகம்), மா.சரஸ்வதி (நாடகம்), வே.மூா்த்தி (நாடகம்) .

இவா்களுக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT