திருச்சி

ஸ்ரீரங்கத்தில் ரத்ததான முகாம்

2nd Aug 2022 02:41 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கத்தில், ரோட்டரி சங்கம் மற்றும் உயிா்த்துளி ரத்த வங்கி சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் டாக்டா் கோபிநாதன் நினைவு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சிறப்பு ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் வழங்கினா். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத் தலைவா் சத்யநாராயணன், செயலாளா் சேஷாத்ரி, பொருளாளா் சீனிவாசன் மற்றும் உயிா்த்துளி அமைப்பின் இயக்குநா் டாக்டா் எஸ். பிரபாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT