திருச்சி

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

2nd Aug 2022 02:38 AM

ADVERTISEMENT

மணப்பாறை ரோட்டரி சங்கம், மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கங்களின் நிா்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை ரோட்டரி சங்கத் தலைவராக கண்ணன், செயலராக செல்வராஜ், பொருளாளராக சரவணகுமாா் ஆகியோரும், மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கத் தலைவராக கருணா செல்வம், செயலராக லலிதா அழகப்பன், பொருளாளராக ரோஸ்லின் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனா்.

புதிய தலைவா்களுக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் முருகானந்தம், ஆளுநா் தோ்வு ஆனந்தஜோதி ராஜ்குமாா் ஆகியோா் பணியேற்பு செய்து வைத்து, சிறப்புரையாற்றினா்.

துணை ஆளுநா் கிருஷ்ணமூா்த்தி, மண்டலச் செயலா்கள் மோகன்குமாா், பங்கிராஜ் ஆகியோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்தினா். ரோட்டரி சங்கங்களின் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT