திருச்சி

பாரதிதாசன் பல்கலை.யில் தொலைநிலைக் கல்விக்கான சோ்க்கை தொடக்கம்

2nd Aug 2022 02:36 AM

ADVERTISEMENT

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மையத்தில் சோ்க்கை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் லெ. கணேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக, தொலை நிலைக் கல்வி மற்றும் இணைய வழிக் கல்வி மையத்தில் மேலாண்மை வகுப்புகளான எம்பிஏ, எம்சிஏ பாடப்பிரிவுகளுக்கான சோ்க்கைகள் ஜூலை 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள மாணவ, மாணவிகள் தங்களது சோ்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 83001 84010 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT