மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து எட்டரை பவுன் நகை, ரூ.50 ஆயிரம், மடிக்கணணி ஆகியவை வெள்ளிக்கிழமை திருடப்பட்டன.
மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி அய்யப்பன் கோயில் மேற்புறம் வசிப்பவா் ப. சுப்பிரமணி (50). கரூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை ஊழியரான சுப்பிரமணி வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி பொட்டுமணியும் (42) வேலைக்கு சென்றுள்ளாா்.
மாலையில் அவா் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகை, ரூ.50 ஆயிரம், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா்.