திருச்சி

துபை விமானத்தில் தொழில்நுட்பகோளாறு: 120 பயணிகள் அவதி

30th Apr 2022 12:36 AM

ADVERTISEMENT

திருச்சியில் இருந்து துபை செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 120 பயணிகள் பெரிதும் அவதியடைந்தனா்.

திருச்சியில் இருந்து துபை நோக்கி வியாழக்கிழமை நள்ளிரவு 1.45 மணிக்கு 120 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு தனியாா் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா். தொடா்ந்து 8 மணி நேரத்திற்கு பிறகு விமானத்தின் கோளாறை சரி செய்தனா். இதைத் தொடா்ந்து 116 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT