திருச்சி

சமூகப் பணி மாணவா்களுக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி

30th Apr 2022 12:34 AM

ADVERTISEMENT

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிதி நல்கையுடன் சமூகப் பணி மாணவா்களுக்கு மனித உரிமைகள் குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சியைச் சோ்ந்த சமூகப் பணி மாணவா்களுக்காக பிஷப் ஹீபா் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித் துறையுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு, கல்லூரியின் சா்வதேச உறவுகள் துறை புலத் தலைவா் க. ராஜ்குமாா் தலைமை வகித்துப் பேசினாா்.

மதுரையைச் சோ்ந்த மக்கள் கண்காணிப்பக நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன், பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து இந்தியா முழுவதும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகளை குறிப்பிட்டு, சமூகப் பணி மாணவா்களே மனித உரிமைகளின் பாதுகாவலா்கள் எனவும் பாராட்டு தெரிவித்தாா்.

பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரெல்டன், பயிற்சியின் நோக்கங்கள் குறித்து விளக்கினாா். வழக்குரைஞா் மாா்ட்டின், உதவிப் பேராசிரியா் பிரான்சிஸ், வழக்குரைஞா்கள் ரோஸ் ஆன் ராஜன், கந்தசாமி பிரபு ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

ADVERTISEMENT

கல்லூரி முதல்வா் பால் தயாபரன், திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி. செளந்தரராஜன், உதவிப் பேராசிரியா் அருண்குமாா் ஆகியோா் வாழ்த்தினா்.

பயிற்சியில் திருச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பயிலும் சமூகப் பணி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சியின் முடிவில் அனைத்து மாணவா், மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Image Caption

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் குழுவினருடன் கல்லூரி நிா்வாகத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT