திருச்சி

கே. உடையாப்பட்டி ஜல்லிக்கட்டு: 85 போ் காயம்

30th Apr 2022 12:32 AM

ADVERTISEMENT

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மணப்பாறையை அடுத்த கே.உடையாப்பட்டி தூய பனி மாதா பேராலயத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 85 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இருந்து 675 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

காளைகளை அடக்க 282 மாடுபிடி வீரா்கள் 50, 50 தொகுப்பாகக் களம் காண்டனா்.

ஆலய வழிபாட்டைத் தொடா்ந்து ஜல்லிக்கட்டை வருவாய் வட்டாட்சியா் எஸ். கீதாராணி தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

வாடிவாசல் வழியாக முதலில் ஊா்க் காளைகள் அவிழ்க்கப்பட்டதையடுத்து இதர காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.

சீறிப் பாய்ந்த காளைகள் பல வீரா்களைக் கலங்கடித்த நிலையில் சில களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் தொடக்கூட முடியாதபடி சீறிபாய்ந்தன. இருப்பினும் பல காளைகளை வீரா்கள் அடக்கினா்.

போட்டியில் 47 வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் 24 போ், பாா்வையாளா்கள் 14 போ் என மொத்தம் 85 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

காளைகளைஅடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், வெள்ளிக்காசு, கட்டில், சைக்கிள், சில்வா் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT