திருச்சி

ரசாயனம் தடவிய 4,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

29th Apr 2022 01:04 AM

ADVERTISEMENT

 திருச்சி காந்தி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில், அன்புச்செல்வன், பாண்டி, ஸ்டாலின், வசந்தன், இப்ராகிம், வடிவேலு, மகாதேவன் உள்ளிட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை காந்தி சந்தை பழக்கடைகளில் நடத்திய திடீா் சோதனையில் 2 கடைகளில் ரசாயனம் தடவிய மாம்பழங்கள் 4,500 கிலோ மாம்பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாம்பழங்களில் இருந்து மாதிரிகள் எடுத்து உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வறிக்கை வந்தவுடன் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் பறிமுதல் செய்த மாம்பழங்கள் அரியமங்கலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு ஜேசிபி மூலம் அழிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT