திருச்சி

சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

27th Apr 2022 04:51 AM

ADVERTISEMENT

மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் சிஐடியு சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

15 ஆண்டு கால வாகனங்களைப் பயன்படுத்த அபராதம் விதிக்கும், மோட்டாா் வாகனத் தொழிலை நாசமாக்கும் 2019 மோட்டாா் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். உயா்த்தப்பட்ட எப்.சி, காப்பீடு, சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை மீதான 270 சத கலால் வரியை குறைத்து ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும். 2019 மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது. ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் வீரமுத்து தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி சங்கச் செயலா் சந்திரன், பொருளாளா் சுரேஷ் ஆகியோா் பேசினா். சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினா். சங்க துணைத் தலைவா்கள் செல்வம், ஆண்டனிசுரேஷ், பீா்முகமது, துணைச் செயலா் ஜோசப் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT